ஆனைத்து வல்லரசு நாடுகளுக்கும் மூன்றாம் உலக போர் பற்றிய பயம் இருக்கும் நிலையில் செயற்கை கோள் தாக்குதல் என்பது ஒரு புதிய, வலிமையான ஆயுதமாகவே உருப்பெரும். ஓரு அற்ப காரணத்துக்காக ஒரு நாட்டின் மீது ஆயுத பிரயோகம் செய்து, அந்நாட்டின் அதிபரையே தூக்கிலிட்டு கொல்வது என்பது எளிதான காரியம் எனும் இந்த சூழ்நிலையில் "செயற்கை கோள் தாக்குதல்" நடை பெறாது என்பதற்கு என்ன நிச்சயம்?
மேலே உள்ள படத்தில் காட்டிய படி மூன்று அதிக செயல் திறனுள்ள செயற்கை கோள் ஏவப்பட்டாலே உலகின் அனைத்து நாடுகளும் செலவில்லாமல் தகவல் தொடர்பு கொள்ள முடியும். செய்வார்களா இந்த தேசத்தார்? பாதுகாப்பு பிரச்சனை என்ற ஒற்றை வரியில் அந்த யோசனையை நிராகரித்து விடுவர். இன்னும் இரு நூற்றாண்டுகளுக்குள் வான் வெளிக்கு செல்வது என்பது கிஶ்கிந்தா செல்வது போலாகி விடும். எனவே முற்போக்கு சிந்தனையுடனும், எதிர்கால சந்ததியரின் சிறப்பான வாழ்வையும் நினைத்து பார்க்கும் வகையில் இதனைத்தும் எளிதாக நிறைவேற்றக்கூடிய ஒரு சித்தாந்தம் ஆகும்.
காஞ்சி மாநகரின் எதிர்காலமே கேள்விக்குறி என்றாயினும், முற்றுகையிட்ட 'வாதாபி சக்கரவர்த்தி' புலிகேசி வெள்ளை கொடி காட்டிய ஓரே காரணத்திற்காக 'விசித்திர சித்தர்' மகேந்திர பல்லவர், புலிகேசியை காஞ்சி கோட்டைக்குள் நட்புடன் அழைத்து சென்ற மாண்பை என்ன வென்று சொல்வது? மகேந்திர பல்லவரின் நோக்கம், கனவு எல்லாம், போரற்ற, கல்வியில் சிறந்த உலகம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே அப்படி ஒரு முற்போக்குச் சிந்தனைவாதி இருந்ததை அறிந்த, ஆறறிவை உபயோகிக்க தெரிந்த நாம் அவருக்கு மேல் ஒரு படியாவது சிந்திக்க வேண்டுமல்லவா?
"ஒருங்கிணைந்த உலகம்" எனும் கனவு காண்பதே ஒவொரு மானுடரிடமும் நான் வேண்டிக்கொள்வதாகும். ஒருவர் காணும் கனவு, ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், கோடி என்று பலுகி ஒரு நாள் நிறைவேறும்; ஆந்த நன்நாளை எதிர்நோக்குவோமாக!